Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு சேவையாற்றாமல் பாராமுகமாக உள்ள அரச அதிகாரிகளுக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஊடாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென, ஈ. பி. டி. பியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு. திலீபன் தெரிவித்தார்.
வவுனியாவில், இன்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வவுனியாவிலுள்ள அரச உயர் பதவி வகிப்பவர்களிடம் மக்கள் சென்று தமது குறைகளைத் தீர்த்துக்கொள்ள செல்லும்போது, பொறுப்பிலுள்ள அரச உத்தியோகத்தர்களும் உயர் அதிகாரிகளும் பல தமிழ்க் கிராமங்களின் வளர்ச்சியை குழிதோண்டிப் புதை்துள்ளதாகவும் சாடினார்.
அரச சலுகைகளையும் உயர் பதவிகளையும் தம்வசம் வைத்துக்கொண்டு, பதவிகளை துஷ்பிரயோகம் செய்யும் இவ்வாறான அரச உயர் பதவிகளிலுள்ளவர்களுக்கு, மிக விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமமெனவும், அவர் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago