2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பாலத்தை நிர்மாணிக்க அங்கிகாரம்

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, கொக்கிளாய் - புல்மோட்டை வீதியின் கொக்கிளாய் களப்புக்கான பாலம் , அதற்கான மாற்று வழிப்பாதை என்பவற்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவால், சமர்பித்த யோசனைக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான கரையோர தரையுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, கொக்கிளாய் - புல்மோட்டை வீதியின் கொக்கிளாய் களப்புக்கான பாலம் , அதற்கான மாற்று வழிப்பாதை என்பவற்றை நிர்மாணிப்பதற்கு, அமைச்சரவையில் பரிந்துரைக்கப்பட்டது.

இதன் மூலம் முல்லைத்தீவு – புல்மோட்டைக்ககு இடையில் சுமார் 100 கிலோ மீற்றர் தூரம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இந்த திட்டத்துக்காக செக் குடியரசின் வங்கியிடமும் உள்ளுர் வர்த்தக வங்கியிடமும் நிதி வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு, கடன் இணக்கப்பாட்டு பேச்சுவார்தையை நடத்துவதற்கும் அமைச்சரவையில் பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்தே, இவ்விரு யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .