2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பிரச்சினைகளைக் கேட்க வருகை தராத மக்கள் பிரதிநிதிகள்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 18 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆகியவற்றில், நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை.

கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் என்பன, இன்று (18) இடம்பெற்றன. இவற்றில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கே.என்.டக்ளஸ் தேவானந்தா, ஈ.சரவணபவன், வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோருக்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும், அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, திங்கட்கிழமை இடம்பெற்ற கண்டாவளைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆகியவற்றிலும், இவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .