2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம் கோட்டாவுக்கு இல்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். 

பூநகரி - வாடியடி சந்தைக்கான கட்டடத்தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு, பதவி ஏற்ற நாளிலிருந்து, “சிங்கள - பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டுமே, நான், இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டேன்” என்கிற மமதையில் கூறிக்கொண்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். 

இதுவரை, வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரைக் கூட தெரிவுசெய்ய மனம் இல்லாதவர், தமிழர்களுக்கான பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பாரெனக் கேள்வியெழுப்பிய சிறிதரன் எம்.பி, இந்திய விஜயத்தின் போது, இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் விடயங்களை, இந்தியாவில் வைத்தே நடைமுறைப்படுத்த முடியாது எனக் கூறுபவர், தமக்கான அதிகாரங்களைத் தருவாரா எனவும் வினவினார்.

எமது மக்களின் இலட்சக்கணக்கான கொலைகளுக்குக் காரணமான ஒரு போர்க் குற்றவாளியாக இருப்பவர், தம்மை இன்னும் அரவணைத்துச் செல்லும் மனப்பாங்குக்கு வரவில்லையெனவும், அவர் சாடினார். 

எனவே, தமக்கான உரிமைகள் கிடைக்கப்பெற்றால், தமது பிரதேசத்துக்கான அபிவிருத்திப் பணிகளை, தாம் சுயமாகவே மேற்கொள்வோமெனவும், சிறிதரன் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .