2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பிரதமருக்கு கடிதம் கொடுத்த சிவமோகன்

Editorial   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணியை விடுவிப்பதாக, முன்னர் இருந்த 62ஆவது படைப்பிரிவின் இராணுவத் தளபதி கொடுத்த கடிதத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ​கையளித்தார்.

பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக படைத்தரப்பு அறிவித்துள்ள நிலையில், குறித்த காணியில் நிலைக்கொண்டிருந்த படைமுகாம் அதிகாரி, அங்கிருந்து படையினர் விலகுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனிடம் கடிதமொன்றை கொடுத்துள்ளார்.

இருப்பினும் அக்காணியிர் படையினர் நிலைகொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, முல்லைத்தீவு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து, படைத் தளபதி கொடுத்த கடிதத்தை, பிரதமரிடம் சிவமோகன் எம்.பி கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .