2025 மே 05, திங்கட்கிழமை

பிரதேச சபை அமர்வில் அஞ்சலி

Niroshini   / 2021 மே 13 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் (13), நானாட்டான் பிரதேச சபையின் 39 ஆவது அமர்வின் போது சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நானாட்டான் பிரதேச சபையின் 39ஆவது அமர்வு இன்று  (13) காலை 10 மணியளவில், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர்  திருச் செல்வம் பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நானாட்டான பிரதேச சபையின் உறுப்பினர் ஆர்.ஜீவனின் ஏற்பாட்டில், இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர்இ சக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, உயிர் நீத்த மக்களுக்கு சுடர் ஏற்றி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து சபை அமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X