2025 மே 05, திங்கட்கிழமை

’பிரதேச சபைக்குரிய கிணறு கையளிக்கப்படவில்லை’

Niroshini   / 2021 மே 26 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள பிரதேச சபைக்குரிய கிணற்றை இராணுவத்தினர் பிரதேச சபையிடம் கையளிக்கவில்லை என, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்தார்.  

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தால் குறித்த கிணறு பிரதேச சபையிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும்  இராணுவமும் அந்தக் கிணற்றை பிரதேச சபையிடம் கையளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை கிணறு கையளிக்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.

இந்தக் கிணற்றில் இருந்து பிரதேச சபை குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் இராணுவத்தின் பொறுப்பில்  குறித்த கிணறு தற்போது உள்ளதால்,  இராணுவமும் கூடுதலான நீரைப் பயன்படுத்துகின்றதெனவும், அவர் தெரிவித்தார்.

"குறித்த கிணறு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டிருந்தால், வறட்சி காலங்களில் குடிநீர் விநியோகத்தினை இலகுவாக மேற்கொள்ளலாம்.  ஆனால், தற்போது குடிநீர் வழங்கலில் பிரதேச சபை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது" எனவும் தெரிவித்தார்.  

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X