Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக, கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், பிரதேச சபையின் முக்கிய பணிகளான கழிவு அகற்றல், குடிநீர் தேவைப்படும் பகுதிகளுக்கு எந்த நேரமும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் என்பன நடைபெறுகின்றன எனவும் அதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
பிரதேச சபைக்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வாகன வளங்கள் குறைவாக காணப்பட்டாலும், இருக்pன்ற வளங்களை வைத்துக் கொண்டு வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், குடிநீர் தேவைப்படுபவர்கள் பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டால், குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தவிசாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .