Niroshini / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பகுதிகள் மற்றும் அந்தக் குளத்தின் கீழ் நீண்ட காலமாக பயிர்ச் செய்கை மேற்கொண்டு வந்த விவசாய காணிகள் என்பன வனவளத் திணைக்களத்தால் எல்லையிடப்பட்டுள்ளன.
பிரமந்தனாறு குளமானது, நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள நடுத்தர குளங்களில் ஒன்றாக காணப்படுவதுடன், 602 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள், பெரும்போகம் மற்றும் சிறுபோகப் பயிர்ச் செய்கைளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று (08) முதல், வனவளத் திணைக்களத்தால் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளத்தின் நீரேந்து பிரதேசங்கள், குளத்தின் கீழான பொதுமக்களின் வயல் காணிகள், குளத்தின் வான் பகுதி என்பன வனப் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு, எல்லைகள் இடப்பட்டுள்ளன.
30 minute ago
36 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
36 minute ago
45 minute ago