2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’பிரேரணைகளை மூன்று நாள்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கவும்’

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்த ஆண்டில் இருந்து, சபையில் முன் வைக்கப்படவுள்ள பிரேரணைகளை மூன்று நாள்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமென, மன்னார் நகர தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 23ஆவது அமர்வு, நகர சபையின் சபா மண்டபத்தில், நேற்று (28) தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன்  தலைமையில் நடைபெற்றது. இதன்போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், வரவு,செலவுத் திட்டங்களுக்கு அமைவாக உரிய காலப்பகுதிக்குள் தாங்கள் வேலைத்திட்டங்களை முடிக்க வேண்டுமெனவும் இதற்கமைய, முதலாவது காலாண்டு  பகுதிக்குள் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து, சபையிலே கலந்தாலோசித்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.

எனவே, இவ்வேலைத்திட்டங்கள் குறித்து சபையில் முன் வைக்கப்படவுள்ள பிரேரணைகளை, மூன்று நாள்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமெனத் தெரித்த தவிசாளர், குறித்த பிரேரணையில் கூறப்படுகின்ற விடயங்களை மாத்திரம் அறிக்கையாக தயாரிக்க வேண்டுமெனவும் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் அவ்வறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாதெனவும் கூறினார்.

பிரேரணையில் முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் மாத்திரமே கூட்டறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படுமெனவும், தவிசாளர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X