2025 மே 21, புதன்கிழமை

பீடாதிபதிக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி க. சுவர்ணராஜாவுக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பாதுகாப்பு ஊழியரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் தற்காலிக பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றிய வீ.மனோகரன் என்பராலேயே, இவ்வாறு நேற்று (03) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிக்கு, தனது வரவுப் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்கு மறுப்பு தெரிவித்து, அப்புத்தகத்தை ஒழித்து வைத்துள்ளதாகவும் தனது கடமையை செய்வதற்கு இடயூறு ஏற்படுத்திவருவதாகவும் தெரிவித்தே, பாதுகாப்பு ஊழியர் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் பதவி உயர்வு கோரியமைக்கு பழிவாங்கும் முகமாகவே, குறித்த பீடாதிபதி இவ்வாறு செயற்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட பாதுகாப்பு ஊழியர் தெரிவித்தார்.

இது குறித்து வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி க. சுவர்ணராஜாவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, அதற்கு பதிலளித்த அவர்,

பாதுகாப்பு ஊழியர் அன்றைய தினம் பணிக்கு வந்துவிட்டு கடமையில் நிற்கவில்லையெனவும் அவர் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றுவதற்கு கடிதங்கள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது அலுவலகத்தில் கூட்டமொன்று இடம்பெற்று கொண்டிருக்கையில், குறித்த பாதுகாப்பு ஊழியர், அலுவலகத்துக்குள் உட்புகுந்து வரவுப் பதிவேடு புத்தகத்தை வழங்குமாறு கோரி, இடையூறு ஏற்படுத்தியதாகவும், அவர் தெரிவித்தார்.

இது குறித்து, அலுவலக ரீதியாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X