2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘புதிய அரசாங்கத்துக்கு சுமந்திரன் ஆதரவளிக்கவுள்ளார்’

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசாங்கத்துக்கு ஆதராவாகச் செயற்பட முற்படுகின்றாரென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

அத்தடன், சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆக்யோர், சிறிது காலத்துக்கு, தங்களது பதவிகளை இராஜினாமா செய்து, அரசியிலில் இருந்து ஒதுங்கியிருப்பது, தமிழ் மக்களுக்குச் செய்யும் பெரும் உதவியாக இருக்குமெனவும், அவர் கூறினார்.

கிளிநொச்சியில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ரணில் விக்கரமசிங்கவுக்கு ஆதராகச் செயற்பட்டு வந்த சுமந்திரன், இன்று, புதிய அரசாங்கத்துக்கும் அவ்வாறாக செயற்பட முற்படுகின்றாரெனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ந்தும் நீங்கள் கொடுத்த வந்த ஆதரவால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்பெறவில்லையெனவும், அவர் கூறினார்.

இந்திய அரசமைப்பு முறையிலான தீர்வுத் திட்டம் ஒன்றே, தமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வென்று, தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளதாகத் தெரிவித்த ஆனந்த சங்கரி, மீண்டும் குறித்த தீர்வை முன்வைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்தச் சந்தர்ப்பத்தை, தான், மீண்டும் ஆரம்ப புள்ளியாகப் பயன்படுத்தவுள்ளதாகவும், ஆனந்த சங்கரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .