Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இளவேனில் சனசமூக நிலைய திறப்பு நிகழ்வு, இன்று (15) நடைபெற்றது.
வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எட்டு இலட்சம் ரூபாய் செலவில் சி.செல்லத்துரையின் காணி அன்பளிப்புடன் மாணிக்கபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த புதிய கட்டட திறப்பு விழா, இளவேனில் சனசமூக நிலையத் தலைவர் தே.சந்திரமேனன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் மற்றும் சிறப்பு விருன்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந், பிரதேச சபை உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் விக்டா ஜெயசிங்கம், கிரிசலீஸ் அணித் தலைவர் ம.பிரபாகரன், கிராம அலுவலகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026