Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - புதிய கற்பகபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தை நேற்று (20) இரவு முற்றுகையிட்டமையால், அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.
நபர் ஒருவர் தன்னை தாக்கியதாக தெரிவித்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ஜ.கபில்ராஜ் என்ற 23 வயதுடைய இளைஞரை, பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்பு தெரிவித்தும், தாக்கியதாக போடப்பட்ட முறைப்பாடு பொய் என கூறியும் கைது செய்யப்பட்ட இளைஞரை விடுவிக்க கோரியும் புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த எண்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டனர்.
இதேவேளை, இளைஞரை தாக்கிய பிரதேசசபை உறுப்பினரிடம் விளக்கம் கேட்க சென்ற இளைஞரின் மனைவியை, பிரதேசசபை உறுப்பினரும், அவரது மனைவியும் தாக்கியதாக தெரிவித்து பிறிதொரு முறைப்பாடும் பொலிஸ் நிலையத்தில் அளிக்கபட்டுள்ளது.
இதற்கமைய, பொலிஸார் பிரதேச சபை உறுப்பினரின் மனைவியை கைது செய்துள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததுடன், முறைப்பாடளித்த பிரதேசசபை உறுப்பினர், தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கபில்ராஜ் என்பவரின் மனைவியும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.
பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது செய்யப்பட்ட பின்னர், இரவு 11.30 மணியளவில் மக்கள் பொலிஸ் நிலையத்திலிருந்து சென்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago