2025 மே 09, வெள்ளிக்கிழமை

புதிய கல்விப் பணிப்பாளர் பதவியேற்பு

Niroshini   / 2021 ஜூலை 07 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இ.தமிழ்மாறன், இன்று (07)  தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்று சென்றதை அடுத்து, புதிய கல்விப் பணிப்பாளர் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு நியமிக்கப்படவில்லை.
முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு புதிய கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு, பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், வடமாகாண கல்வி அமைச்சால், முல்லைத்தீவுக்கான புதிய கல்விப் பணிப்பாளராக இ.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டார்.

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.மாலதி முகுந்தன், முல்லைத்தீவின் பதில் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X