2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘புதிய கூட்டணியிடம் இருந்து அழைப்பு வரவில்லை’

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான புதிய கூட்டணியிடம் இருந்து தமக்கு எந்தவித அழைப்புகளும் வரவில்லையெனத் தெரிவித்த விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் தலைவர் மலரவன், அது தொடர்பாக தாங்களும் எந்த விருப்பத்தையும் தெரிவிக்கவில்லையெனவும் கூறினார்.

விடுதலைபுலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்புக் கூட்டம், வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில், இன்று (09) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மக்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது, எதிர்வரும் தேர்தல் காலங்களில் தாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான புதிய கூட்டணியிடம் இருந்து தமக்கு எந்தவித அழைப்புகளும் வரவில்லையெனத் தெரிவித்த அவர், அது தொடர்பாக தாங்களும் எந்த விருப்பத்தையும் தெரிவிக்கவில்லையெனவும் மக்களின் நலன்சார்ந்த வேலைதிட்டமொன்று தமிழ் நிலப்பரப்பில் நிறைவேறுமானால், எதிர்வரும் காலங்களில், அவர்களுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஆலோசித்து  முடிவெடுப்போமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .