Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 18 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என். நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்
புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் இருந்து, தலா ஐநூறு ரூபாயை அறவிட்டு, அத்தொகைக்குரிய காசோலையை, மாவட்டச் சமூர்த்தி பொது வைப்புக்கணக்கில் வரவு வைக்குமாறு, கிளிநொச்சியிலுள்ள அனைத்து சமூர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டப் பணிப்பாளர் திருமதி ஆ.தவபாலனால், இந்தக் கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் சுற்றுநிருபத்துக்கு அமைய, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் புதிய சமுர்த்திப் பயனாளிகளின் உரித்துப் பத்திரிடும் உறைகள், மேடை தயாரித்தல் அலங்கரித்தல், கதிரைகள், ஏனைய உபரணங்கள், உபசரிப்புகள், நான்கு நடனக் குழுக்களுக்கான செலவுகள், “புதிதாக சிந்திப்போம் ஊக்கத்தில் எழுவோம்” எனும் தலைப்பில் பிரசாரம் செய்தல், டிசேர்ட்டுகள் போன்ற செலவுகளுக்கே, இந்த நிதியை அறவிடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து, 13,078 புதிய சமூர்த்தி பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வனைவரிடமிருந்தும் அறவிடப்படும் தலா 500 ரூபாய், சமூர்த்தி வங்கிகளிடமிருந்து மாவட்டச் சமூர்த்திப் பொது வைப்புக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
24 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
42 minute ago