2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புதிய நிர்வாகத் தெரிவு

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் குளத்தின் நாகதம்பிரான் கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகம் நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

முற்பகல் 10 மணிக்கு ஸ்கந்தபுரம் பொது நோக்கு மண்டபத்தில், ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்ப்பாசனத் திணைக்களம், அக்கராயன் கமநல சேவை நிலையம் ஆகியவற்றின் அதிகாரிகள், அக்கராயன், கண்ணகைபுரம் ஆகிய கிராம அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது.

இதன் போது, நாகதம்பிரான் கமக்கார அமைப்பின் புதிய தலைவராக சி.கனகசபாபதி தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக முத்தையா சிவகுமாரும் பொருளாளராக கிருஸ்ணபிள்ளை சிவநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

அத்துடன், உறுப்பினர்கள் எட்டு பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளத்தின் கீழ் இயங்குகின்ற நான்கு கமக்கார அமைப்புகளில் நாகதம்பிரான் கமக்கார அமைப்பு முக்கிய அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .