2025 மே 07, புதன்கிழமை

புதிய வீடு இராணுவத்தினரால் கையளிப்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன் 

முல்லைத்தீவு - முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பமொன்றுக்கு புதிதாக  வீடொன்று அமைக்கப்பட்டு, நேற்று (10) இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் றாயன் அவர்களின் நிதி உதவியில், இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன், இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட இரணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுரியபண்டார மற்றும் சமூக செயற்பாட்டாளர் றாஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது வருகை தந்த கிராமத்தவர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X