Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 07 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பில் இயங்கிவந்த ஆடைத்தொழிற்சாலை, இன்று திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்த 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருபு;பு - ஒட்டுசுட்டான் வீதியில் மக்கள் எதிர்பைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகாலை வேளையில் குறித்த பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஐயந் உள்ளிட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்தனர்.
இவர்கள் மீது கொவிட்-19 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்;.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிலமைகளை கட்டுக்குள் கொண்டுவரும் வரை ஆடைத்தொழிற்சாலையை இயங்கவிடவேண்டாம் என, புதுக்குடியிப்பு வணிகர் சங்கத்தினால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வணிகர் சங்கத்தலைவர் நவநீதன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago