Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 28 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 13 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்ற நிலையில் இதுவரை 7,452 குடும்பங்கள் சமுர்த்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடையமாகுமென்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
ஒருதொகுதி சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி பத்திரம் வழங்கும் நிகழ்வு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு, 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்துக்குப் பின்னர் 19 கிராம அலுவலகர் பிரிவில் 6 கிராம அலுவலகர் பிரிவுக்கு மட்டுமே இந்த சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும் கூறினார்.
ஏனைய 13 கிராமங்கள் கடந்த 9 ஆண்டுகாளாக சமுர்த்தி உதவியை அனுபவிக்காத மக்களாகவே காணப்படுகின்றார்களெனத் தெரிவித்த அவர், இந்த விடயம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் மாவட்டச் செயலாளரால் கொழும்பில் நடைபெறும் தேசிய கூட்டங்களிலும் தெரிவித்ததன் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்து புதுக்குடியிருப்பில் புதிதாக சமூர்த்தி பயனாளிகளுக்கு உதவிகள் கிடைக்க காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
“புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆறு கிராம அலுவலகர் பிரிவில் 1,441 குடும்பங்களுக்கு மட்டும் சமுர்த்தி திட்ட பயனாளிகளுக்கு நிவாரணங்கள் உதவிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.
“தற்போது 19 கிராம அலுவலகர் பரிவிலும் 6,011 குடும்பங்கள் உள்வாங்கப்பட்டு மொத்தமாக 7,452 குடும்பங்கள் சமுர்த்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
“புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 13 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்ற நிலையில், 7,452 குடும்பங்கள் சமுர்த்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடையமாகும். புதுக்குடியிருப்பு பிரதேசத்தை பொறுத்தமட்டில், குடும்பங்களின் அடிப்படையில் 56 சதவீதமான குடும்பங்களுக்கு இந்த சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.
“நிவாரணங்களை நம்பி வாழ்கின்ற மக்களாக தொடர்ந்து இருக்காமல் இதன்மூலம் பல்வேறு கடன்களை பெற்று வாழ்வாதாரத்தினை மேம்படுத்த இது வழிவகுக்கும். சமுர்த்தித் திட்டம் மக்களுக்கு கிடைத்திருப்பது, ஒரு வரப்பிரசாதம்.
இதன் மூலம் நிவாரணத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது, மக்களின் எதிர்கால வாழ்க்கையை சரியான முறையில் மேம்படுத்துவதன் மூலம், எமது பிரதேசத்தையும் மாவட்டத்தையும் வறுமையில் இருந்து மாற்றுவதற்கு நீங்களும் பங்காளிகளாக மாறிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
24 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
24 Sep 2025