Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 28 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதியின் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' வேலைத்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதியினால் 13ஆயிரத்து 643 குடும்பங்களுக்கான சமுர்த்தி நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 475 குடும்பங்களுக்கான சமுர்த்தி பத்திரம் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம. பிரதீபன் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதின் அவர்களின் பிரதிநிதியாக மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தயாநந்தன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவின் இணைப்பாளர் அகிலன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க. ஜெனமேஜயந், பிரதேச சபை உறுப்பினர்கள் அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
13 minute ago
22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
40 minute ago