2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புதுக்குடியிருப்பில் வாள்வெட்டு: இருவர் காயம்

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம், வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கைவேலியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது, கைவேலிப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கோம்பாவில் பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வாளால் வெட்டியுள்ளார்கள்.

இதன்போது, 04 ஆம் வட்டாராம் கோம்பாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடையசர்மிலன் என்ற இளைஞனும், கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய லக்கீரன் என்ற இளைஞனும் காயமடைந்து மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், உருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .