2026 மே 02, சனிக்கிழமை

புதுக்குடியிருப்பு பிரதான தபாலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்பட வேண்டும்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப்பிரதேசத்தில் தனியார் கட்டடத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் பிரதான தபாலகத்துக்கான நிரந்தரக்கட்டடத்தை அமைத்துத்தருமாறு பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்;ளன.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து குறித்த தபாலகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் வீடொன்றில் பெரும் இட நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது.

இத்தபாலகத்துக்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் காணி வழங்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான கட்டடம் இதுவரை அமைக்கப்படாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

இத்தபாலகம் இவ்வாறு தனியார் வீட்டில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதால் இதன் கீழுள்ள ஆனந்தபுரம் உபதபாலகம், உடையார்கட்டு உபதபாலகம், விசுவமடு உபதபாலகம் ஆகியவற்றுக்கான பணிகளை முன்னெடுத்;தல் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதில் பெரும் நெருக்கடிகள் காணப்படுவதாகவும் தபாலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .