Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 16 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
மாங்குளம் வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு தொற்றை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு தொகுதியினருக்கும் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊடாக இன்னொரு தொகுதியினருக்கும் கொரோனா தொற்று பரவி வருகின்ற நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே கடும் அச்சமான சூழ்நிலை நிலவி வருகின்றது
இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று பயணத்தடை போடப்பட்டிருக்கும் நிலையில், நாளைய தினம் மக்கள் நடமாடக் கூடிய வாய்புள்ள இடங்களை, இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் முக்கிய நகரங்கள் பேருந்து தரிப்பிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகர் பகுதி, பஸ் தரிப்பிடம் மற்றும் திருமுறிகண்டி ஆலய வளாகம் மற்றும் அதனை அண்டிய கடை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago