Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசத்தில், குழாய் வழி குடிநீர் இணைப்பை பெற்றுக்கொண்ட மக்களுக்கு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் அறிவிப்பை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதாவது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால், குழாய் வழி வழங்கப்படுகின்ற நீர் இணைப்பைப் பெற்றுக்கொண்ட மக்கள், நீர் இணைப்பை பெற்றும் இதுவரை மாதாந்த கட்டணப் பட்டியல் கிடைக்கப்பெறாதவர்கள், நீர்மானியை பொருத்தியும் நீரை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், நீர்மானியில் பிரச்சினைகள் உள்ளவர்கள், புதுகுடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அலுவலகத்திலோ அல்லது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொறியியலாளர் அலுவலக தொலைபேசி இலக்கமான 021-2283981 எனும் தொபேசிஇலகத்துடனோ தொடர்பு கொண்டு, தங்களது பிரச்சினைகளை நிவர்த்தி செய்துகொள்ளுமாறு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago