Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்த நிலையங்களை, சனிக்கிழமை (21) தொடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (27) அதிகாலை வரை பூட்டுவதற்கு, புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்கம், இன்று (19) தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த நாள்களில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மருந்தகங்கள், டயர் ஒட்டுக்கடைகள் என்பன மாத்திரம் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டோ சங்க நிர்வாகம், சிகை அலங்கரிப்பு சங்க நிர்வாகம் என்பனவும், இந்த வர்த்தக சங்கத்தின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு, அதற்கான ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத் தலைவர் நீதன் தெரிவித்தார்.
எனவே, புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட மக்கள், தங்களுக்கு தேவையான உணவு பொருள்களை கொள்வனவு செய்துகொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த அறிவித்தலை மதிக்காது வர்த்தக நிலையங்களை யாராவது திறந்தால், புதுக்குடியிருப்பு சுகாதாரப் பிரிவினரின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், அவர்களும் அவர்களது வர்த்தக நிலையங்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அன்டிஜன் பரிசோதனையும் பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .