2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புதூர் நாகதம்பிரான் பொங்கல் விழா: 80 பேருக்கே அனுமதி

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - புதூர் நாகதம்பிரான் கோவில் வருடாந்த பொங்கல் விழாவில், நிர்வாகத்தினர் பெயர் வழங்கி சிபாரிசு செய்த 80 பேர் மாத்திரமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதூர் நாகதம்பிரான் கோவில் வருடாந்த பொங்கல் விழா, திங்கட்கிழமை  (22) நடைபெறவுள்ளது. 

இதனை முன்னிட்டு பொங்கல் விழாவை முன்னெடுப்பதற்கான நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று,  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில், இன்று  நடைபெற்றது.

இதன்போதே, கோவில் நிர்வாகத்தினரால் குறிப்பிடப்படும் 80 பேருக்கு மாத்திரம் கோவிலுக்குள் செலவதற்கு அனுமதி வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு விசேட அனுமதிப்பத்திரமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அனுமதிக்கப்பட்டவர்களை தவிர ஏனைய பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதுடன்,  கோவிலுக்குச் செல்லும் இரு பிரதான வாயிலிலும் பொலிஸாரினால் வீதி தடை ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேர்த்திகடன்களை செலுத்தும் அடியவர்கள் பிறிதொரு தினத்தில் அதனை செலுத்துமாறும், வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .