2025 ஜூலை 19, சனிக்கிழமை

புதைகுழிகள் குறித்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

Editorial   / 2019 மே 17 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சதொச மனித புதைகுழி மற்றும் மாந்தை மனித புதைகுழி ஆகிய இரு வழக்கு விசாரணைகளையும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை ஒத்திவைத்து, மன்னார் நீதவான் ரி.சரவணராஜா, இன்று (17) உத்தரவிட்டார்

முதலில், மன்னார் நகரப்பகுதியில் உள்ள மன்னார் 'சதொச' மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் (17) விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் அவர்களின் எழுத்து மூல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்தது.

இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எழுத்து மூல ஆவணங்களை சமர்ப்பிக்க முற்பட்ட வேளை, ஏற்கெனவே கடந்த முறை அழைக்கப்பட்ட நிறுவனங்கள், பேராசிரியர் ராஜ் சோமதேவ, வைத்தியர்கள் அனைவருடனும் ஏற்கெனவே கலந்துரையாடியதன் அடிப்படையில், அவர்களின் ஒன்றினைந்த அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலான எழுத்து மூல சமர்ப்பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் எமக்கு வழிகாட்டியது.

அதன் அடிப்படையில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பிற்பாடு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக எமது எழுத்து மூல சமர்ப்பனங்களை அடுத்த தவணையான ஜூலை மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

மேலும், மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணைகளும் இன்றைய தினம் (17) இடம் பெற்றது. குறித்த வழக்கு விசாரணையானது கட்டளைக்காக காணப்பட்டது.

ஏற்கெனவே அரச சட்டத்தரணிகளினாலும் பாதிக்கப்பட்ட தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பனங்களின் அடிப்படையில் குறித்த கட்டளை எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கெனவே அகழ்ந்து எடுக்கப்பட்டு அநுராதபுர வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மனித எலும்புகள் தொடர்பிலும், இவை எவ்வாறான பாரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், எங்கு இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற விவரங்கள் தேவைக்காக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அந்த கட்டளை இன்று (17) மன்னார் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையில் ஆய்வு செய்யப்பட முடியாது என குற்றப்புலனாய்வு பிரிவினரினால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும், குற்றப்புலனாய்வு பிரிவினரின் அறிக்கைகளின் படியும் இந்த எச்சங்களையும் மீண்டும் புலோரிடா பீற்றா நிறுவனத்துக்கு அனுப்புமாறு கட்டளை ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேநேரம், ஏற்கெனவே அகழ்வு பணியில் ஈடுபட்ட வைத்தியரட்ன, களனி பல்கலைக்கழக போராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரின் ஆலோசனையை பெற்று, அதற்கான உரிய ஆவணங்களை தயாரிக்குமாறும் ஏற்கெனவே இது சம்மந்தமாக அகழ்வு பணியில் ஈடுபட்ட நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜாவால் இக்கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

குறித்த கட்டளையை தற்போதைய மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவால் இன்று (17) வாசிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட தரப்பினருடைய அறிக்கைகளையோ அல்லது அவர்களின் சமர்ப்பனங்களை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு, மன்னார் நீதிமன்றம் எங்களுக்க உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது.

அத்துடன், இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்தக்கொள்ளப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X