Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - பேயாடிகூழாங்குளத்தில் இந்து கோவில் வளாகத்தில் விகாரை அமைக்கப்பட்ட காணியை பௌத்த மதகுரு கோரியதாக மாவட்ட செயலகம் அனுப்பிய கடிதம் தொடர்பாக, மாவட்ட செயலகம் மன்னிப்புக் கோரியுள்ளது.
20 வருடங்களுக்கு முன்பு வவுனியா - பேயாடிகூழாங்குளம் பகுதியில் இந்து கோவில் அமைந்திருந்த காணியை கையகப்படுத்திய இராணுவத்தினர் தமது வழிபாட்டுக்காக புத்தருடைய சிலையை உருவாக்கி, வழிபட்டு வந்தனர். அனால் இப்போது அந்தப் பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட போதும் அந்தப் புத்தர் சிலை அவ்விடத்தில் இருந்து அகற்றப்படவில்லை அதற்கு அருகாக நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் தற்போதும் வழிபட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த விகாரை அமைந்துள்ள காணியை பிக்கு ஒருவர் தமக்கு தருமாறு கோருவதாக வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் அண்மையில் குற்றசாட்டு ஒன்றை முன்வைத்திருந்தது.
இந்நிலையில் குறித்த காணியை விகாரதிபதி ஒருவர் தமக்கு வழங்கும்படி கோருவதாகவும் அவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக மாவட்ட ஒருங்கினைப்பு மற்றும் நல்லிணக்க குழுவினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, வவுனியா மாவட்டச் செயலகத்தால் நல்லிணக்க குழுவினருக்கு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கடிதம் புத்தர் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கும் அனுப்பபட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் நேற்று மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் மாவட்டசெயலகத்தால் அனுப்பட்ட கடிதம் தவறுதலாக அனுப்பட்டதாகவும் குறித்த விகாரை அமைந்துள்ள காணியினை யாரும் உரிமை கோரவில்லை என்றும் முன்னர் போலவே வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும்,குறித்த கடிதம் தொடர்பாக தான் மன்னிப்புகோருவதாக அரச அதிபர் தெரிவித்ததாகவும் சந்திப்பில் கலந்துகொண்ட பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
அப்படியாயின் எதற்காக மாவட்ட செயலகம் அவ்வாறான கடிதத்தை அனுப்பியது என்று பொதுமக்கள் விசனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago