Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்துக்குட்பட்ட கோரக்கன்கட்டு கிராமத்துக்கான பிரதான வீதி, புனரமைப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும், குறித்த வீதி உரிய ஒப்பந்தகாரரால் உரியமுறையில் புனரமைக்கப்பட -வில்லையென, பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்கட்டு குடியிருப்புத்திட்டம், ஒதியநகர் ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் ஒரே ஒரு பிரதான வீதியாக காணப்படும் கோரக்கன்கட்டு குடியிருப்பு வீதியின் குறிப்பிட்ட வரையான வீதி, புனரமைப்புக்கு தெரிவு செய்யப்பட்டு, கம்பரெலிய திட்டத்தின் கீழ் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த வீதிக்கு அதே வட்டாரத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினரான ஒப்பந்தகாரரால், தரமற்ற கிரவல் மண் போடப்பட்டு புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் தற்போது வீதியால் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறினார்.
எந்தப் போக்குவரத்தும் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிரவல் மண்ணுக்கு பதிலாக தரமற்ற களி மண் போடப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த வீதி சேறும் சகதியுமாக காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த வீதியை உரிய முறையில் புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான பிரதான போக்குவரத்துக்குரிய வீதியாகவே இவ்வீதி காணப்படுகின்றது என்பதை எல்லோரும் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும், மேற்படி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
27 minute ago
38 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
38 minute ago
52 minute ago