2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

Editorial   / 2019 மே 24 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடு வழங்கி வைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் புயல் தாக்கத்தால் 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 3 வீடுகளும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 22 வீடுகளும் புயல்காற்றால் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தம் தொடர்பில் கிராம சேவகர்கள் ஊடாக பிரதேச செயலக அதிகாரிகளாலும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலைய அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டு  அழிவு தொடர்பான திட்டமிடல் அதிகாரிகளால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், 25 குடும்பங்களுக்கும் முதற்கட்டமாக தலா பத்தாயிரம் ரூபாய் நிதி தேசிய அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை நிலையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இவர்களுக்கான குறித்த நிதி ஒதுக்கீடு விரைவில் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .