2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நிதி உதவி

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் புற்றுநோயிால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, லண்டனிலுள்ள பழைய மாணவர்கள் (VTMMV Global AA)  ஊடாகவும் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் மூலமாகவும் 16 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்து வரும் தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் இருதயப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அச்சிறுவனை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்வதற்கு வைத்திய செலவாக 75 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்னாள் பழைய மாணவர் சங்கச் செயலாளர் எஸ். சுஜனின் வேண்டுகோளுக்கு அமைவாக, லண்டனிலுள்ள பழைய மாணவர் கா.மனோராஜின் ஊடாக லண்டனிலுள்ள பழைய மாணவர்கள், நலன்  VTMM Global AA ஊடாகவும் இலங்கையிலுள்ள வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட 1,609,728 ரூபாய், மாணவனின் வங்கி கணக்கில் வைத்திய செலவுக்காக வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் வைத்திய செலவுக்காக 75 இலட்சம் தேவைப்படுவதாக வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வரையிலும் 44 இலட்சம் ரூபாய் வரையில் நல் உள்ளங்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டு சிறுவனின் வைத்திய செலவிற்காக வங்கிக்கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது மாணவனுக்கான வைத்திய சிகிச்சை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் ஏனைய மிகுதி தேவைகளுக்காகவும் நன்கொடையாளர்களிடமிருந்து பண உதவி கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .