2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைகோட்டின் கீழ் கல்வி கற்று உயர்தரத்துக்குச் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தால், சமுர்த்தி சிப்தொர கல்வி புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு,  புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற்றுவரும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து, 2020, 2021 வரையான கல்வி ஆண்டில் உயர்தரம் படித்துவரும் மாணவர்களுக்கான மாதம் தோறும் 1,500 ரூபாய் உதவிக்கொடுப்பனவு வழங்கும் சமுர்த்தி சிப்தொர கல்வி புலமைப் பரிசில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, உடையார்கட்டு மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மாவட்டச் சமுர்த்தித் திணைக்களப் பணிப்பாளர் க.ஜெயபவானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் கலந்துகொண்டனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 218 மாணவர்களுக்கு இந்தச் சமுர்த்தி நிவாரண உதவி வழங்கிவைக்கப்பட்டது. 

இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.பிரதாபன், புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி சி.சுப்பிரமணியேஸ்வரன், உடையார்கட்டு மஹா வித்தியால அதிபர் வி.சிறீதரன், விசுவமடு மஹா வித்தியால அதிபர், சுதந்திரபுரம் மஹா வித்தியால அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .