2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘புலி’ சின்னங்களுடன் ‘கிளி’ இளைஞன் கைது

Editorial   / 2021 ஜூலை 09 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் சின்னம் எனக் கூறப்படும் சின்னங்களை தன்னுடை அலைபேசியில் வைத்திருந்த இளைஞன், கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இரும்பு வாள் ஒன்றை மறைத்து வைத்திருக்கின்றார்  என விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன், நேற்று (08) கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து வாள் ஒன்றும், அலைபேசிகள் இரண்டும்   கைப்பற்றப்பட்டுள்ளன.

அவ்விரு அலைபேசிகளையும் சோதித்த போது,   தமிழீழ  விடுதலைப் புலிகள் அமைப்பு, நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்கள்
இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வாள்களுடன் இளைஞர் ஒருவர் இருக்கும்  புகைப்படமும் காணப்பட்டுள்ளது. என பொலிஸார் தெரிவித்தார்.

அந்த புகைப்படத்துடன் இருக்கும் இளைஞன் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X