2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி

Niroshini   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் உள்ள தனிநபர் ஒருவருடைய காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாகக் கூறப்படும் ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்து, இன்று (08) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன், விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் இணைந்து இந்த அகழ்வுப் பணியை முன்னெடுத்தனர்.

இதன்போது,  எதுவித பொருள்களும் கிடைக்காத நிலையில், தோண்டிய பகுதியை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு - கோம்பாவில் பகுதியில் உள்ள தனியார் காணியிலும், விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகக்  கருதப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய, நேற்று 07) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போதும் எதுவிதப் பொருள்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X