2025 மே 19, திங்கட்கிழமை

புளியங்குளம் விபத்தில் கொழும்பு இளைஞன் பலி

Editorial   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, புளியங்குளத்தில் இன்று (02) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நேக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் ஏ9 வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளனர். 

இதன்போது தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பஸ்ஸில் மோதியுள்ளனர். 

இந்த விபத்தில் வத்தளையை சேர்ந்த 21 வயதுடைய கிருபாகரன் துஷ்யந்தன்  என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த ரஞ்சித்குமார் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட மாடும் உயிரிழந்துள்ளது.

-க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X