2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 மார்ச் 11 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தினுடைய வருடாந்த பொங்கல் உற்சவத்துக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது,

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தினுடைய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பாரம்பரிய முறைப்படி மீசாலை புத்தூர்சந்தி பண்டமரவடியில் இருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு வழமை போன்று பொங்கல் விழா நடைபெறவுள்ள இவ்விழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம் பெயர் தேசங்களிலிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இதற்கான சகல ஏற்பாடுகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவாக ஆலய நிர்வாகம்

இதற்கு சகல தரப்புக்களினதும் ஒத்துழைப்புக்களை வழங்கி உதவுமாறு ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .