சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பூநகரி குளம் அமைப்பது தொடர்பில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர் சிலர் இன்று (09) கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி பூநகரி பகுதியில் கொக்குடையான் மாளாப்பு உள்ளிட்ட பத்து வரையான சிறு குளங்களை இணைத்து பாரிய நீர் தேக்கம் அமைப்பது தொடர்பில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருந்தது. 700 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காலை 9 மணியளவில் குறித்த குழுவினர் கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.சுதாகரன் உள்ளிட்ட குழுவினர் குறித்த திட்டம் அமையபோகும் பகுதியை நேரில் பார்வையிட்டனர். இதன்போது குளத்தின் அபிவிருத்திக்காக வகுக்கப்பட்ட திட்டங்களும் குறித்த குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026