2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பூநகரிக் கடலில் அடாத்தாக இழுவைப் படகுகள்

Freelancer   / 2023 மார்ச் 03 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - பூநகரி பள்ளிக்குடா மேற்குப் பகுதி, கௌதாரிமுனையின் தெற்குப் பகுதிகளில் யாழ்ப்பாணம் - குருநகர் இழுவைப் படகுகள் தொழிலில் ஈடுபடுவது உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்கி உள்ளதாக பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சி.சிறிரஞ்சன் தெரிவித்தார்.  

பள்ளிக்குடா, கௌதாரிமுனை இடங்களில்  ஆழங்குறைந்த பகுதிகளில் இழுவைப் படகுகள் தொழிலில் ஈடுபட்டு நண்டு வலை, டிஸ்கோ வலை, கணவாய் குழை என்பவற்றினை சேதப்படுத்தி வருவதன் காரணமாக உள்ளூர் தொழிலாளர்களின் தொழில் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

நாள்தோறும் 15 தொடக்கம் 50 வரையான இழுவைப் படகுகள் தொழிலில் ஈடுபடுகின்றன. 

இழுவைப் படகுகள் ஆழமான கடற்பகுதியில்தான் தொழிலில் ஈடுபட வேண்டும். இது கரையில் இருந்து 2 கிலோமீற்றர் தூரத்திற்கு உட்பட்ட இடங்களில் ஆழங்குறைந்த பகுதிகளில் இழுவைப் படகுகள் தொழிலில் ஈடுபடுகின்றன. 

இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர், துறைசார் அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து அவதானிப்புகளை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X