2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பூநகரிக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்

Editorial   / 2019 மே 20 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரிப் பிரதேசத்துக்கான குடிநீரை விநியோகிப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக, பூநகரிப் பிரதேச சபையின் தவிசாளர் ஐயம்பிள்ளை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், பிரதேச சபை ஊடாக, 7 பிரதேசங்களுக்கும் பிரதேச செயலகம் ஊடாக 8 பிரதேசங்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


இதற்கமைய, பிரதேச சபையால் கறுக்காய் தீவு, ஞானிமடம், செட்டியக்குறிச்சி, பிரமன்கிராய், நெற்புலவு, வாடியடி, ஆகிய ஏழு வட்டாரங்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், அவர் கூறினார்.
 

எனினும், இந்த ஏழு இடங்களுக்கும் விநியோகிப்பதற்கான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவித்த அவர்,
தற்போது முட்கொம்பன் பிரதேசத்திலிருந்து குடி நீர் விநியோகிக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், பிரதேச சபைக்குச் சொந்தமான சுமார் 14 ஆயிரம் லீற்றர் நீர்த்தாங்கி ஊர்தி பழுதடைந்துள்ளதால், சிறிய உழவு இயந்திர நீர்த் தாங்கிகள் மூலமே, குடிநீர் விநியோகிக்கப்படுவதாக, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .