Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - பூந்தோட்டம் மயானத்தில் உள்ள மின் தகன இயந்திரம் பழுதடைந்துள்ளமையால், கொரோனா சடலங்கள் எரியூட்டப்படாமல் தேங்கும் நிலை காணப்படுவதாக, வவுனியா நாகரசபை தவிசாளர் தேசபந்து இ. கௌதமன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வடமாகாணத்தை பொறுத்தவரையில், கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமே எரிவாயு மயானங்கள் இயங்கி வருகின்றன என்றார்.
இந்நிலையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரரோனாவால் உயிரிழப்போரின் சடலங்கள் வவுனியா - பூந்தோட்ட மயானத்திலேயே எரியூட்டப்பட்டுகின்றன எனத் தெரிவித்த அவர், தற்போதைய நிலையில் அதிகளவான மரணங்களால், பூந்தோட்ட மயானம் 24 மணித்தியாலங்களும் இயங்கும் மயானமாக செயற்பட்டு வருகின்றது எனவும் இதனால் தாம் பாரிய சவால்களையும் சிரமங்களையும் எதிர்கொள்கின்றோம் எனவும் கூறினார்.
அதிகளவான சடலங்களால் தமது மயானத்தின் தன்மை மற்றும் வினைத்திறன் குறைந்து செல்வதாகத் தெரிவித்த அவர், ஞாயிற்றுக்கிழமை (29) காலை 8 மணி முதல் மறுநாள் (30) அதிகாலை 4 மணிவரை மாத்திரம், 11 சடலங்களை எரியூட்டியிருந்ததாகவும் இதற்கு மேலதிகமாக நேரப் பற்றாக்குறையால் வவுனியா வைத்தியசாலையில் சடலங்கள் இன்னும் எரியூட்டப்படாமல் உள்ளன எனவும் கூறினார்.
'இந்த நிலையில், நேற்று (30) காலை மயானத்தில் உள்ள மின்தகன இயந்திரம் செயலிழந்துள்ளது. எனினும் இதனை மீள இயக்குவதற்கான முயற்சியை எடுத்து வருகின்றோம். இந்த இயந்திரத்தைப் பழுதுபார்க்க கூடியவர்கள் எவரும் வவுனியாவில் இன்மையால் கொழும்பில் இருந்தே வரவேண்டியுள்ளது.
'ஒருநாள் எமது மயானம் இயங்காது விடும் பட்சத்தில், சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகின்றது' எனவும், தவிசாளர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .