2025 மே 22, வியாழக்கிழமை

பெரியகமம் பகுதியில் செல் கவர்கள் மீட்பு

Editorial   / 2019 மே 07 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் – எழுத்தூர், பெரியகமம் பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியில் இருந்து, இன்று (07) காலை, ஒரு தொகுதில் செல் கவர்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அப்பகுதியில் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது, குறித்த காணியில் கொட்டப்பட்டிருந்த குப்பைக்குள் இருந்து, சுமார் 6 செல் வெடிப்பொருளுக்கான கவர்கள் மூடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன்பின்னர், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும், செல் கவர்களைச் சோதனை செய்த போது, அவற்றுக்குள் செல் அல்லது வெடிப்பொருள்கள் எவையும் இல்லையென உறுதிப்படுத்தனிர்.

இதையடுத்து, குறித்த 6 செல் கவர்களையும் பொலிஸார் மீட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X