2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘பெரியகுளம் பாடசாலை மூடப்பட்டமை மக்கள் குடியேற்றமே காரணம்’

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிராமத்தில் மக்கள் முழுமையாக குடியேறாமையே, முல்லைத்தீவு -பெரியகுளம் பாடசாலை மூடப்பட்டமைக்கு காரணமென, ஒட்டுசுட்டான் கோட்டக் கல்வி அலுவலர் த.பங்கயற்செல்வன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், ஒட்டுசுட்டான் கோட்டத்தில், 27 பாடசாலைகள் உள்ளனவெனவும் அதில் பெரியகுளம் பாடசாலை மாத்திரம் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இக்கிராமத்தில் மக்கள் முழுமையாக குடியேறாமையே இந்நிலைமைக்குக் காரணமெகச் சுட்டிக்காட்டிய அவர். மக்கள் முழுமையாகக் குடியேறி, மாணவர்கள் தொகை அதிகரிக்குமானால், இந்தப் பாடசாலையை இயங்க வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவெனவும் கூறினார்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் கோட்டத்தில் ஆசிரிய நெருக்கடி காணப்படுவதாகத் தெரிவித்த பங்கயற்செல்வன், ஆரம்பப் பிரிவு வகுப்புகளிலேயே கூடுதலான ஆசிரிய நெருக்கடி காணப்படுவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X