2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக் காதலால் சிறுமிகள் துஸ்பிரயோகம்

Freelancer   / 2022 மார்ச் 19 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும்  புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்கள்.

சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு - செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த இளைஞன் சிறுமியினை மட்டக்களப்பு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு செல்வதாக சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிச்சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டுவந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளான்.

இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ் நகரப்பகுதியில் சுற்றிதிரிந்த வேளையில் கடை ஒன்றில் பொருட்களை வாங்கிய போது நள்ளிரவாகியுள்ளது.

இரண்டு சிறமிகளுக்கும் உதவிசெய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து மற்றைய சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன்.

சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X