Editorial / 2019 மார்ச் 21 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - புளியம்பொக்கனை நாதகம்பிரான் கோவிலின் பொங்கல் உற்வசம், இன்று இரவு நடைபெறவுள்ளது.
வருடந்தோறும் பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுக்கு எட்டு நாள்களுக்கு முன் விளக்கு வைக்கும் நிகழ்வு இடம்பெற்று, பொங்கலுக்கான பண்டங்களை சேகரிக்கும் மாட்டு வண்டிகள் யாழ்ப்பாணம் புத்தூர் நோக்கி புறப்படும். அவ்வாறு புறப்படும் மாட்டு வண்டிகள் பொங்கலுக்கான பண்டங்களை சேகரித்துக்கொண்டு, பொங்கல் தினமான பங்குனி உத்தரநாள் காலை கோவிலை சென்றடையும்.
அவ்வாறே இன்றும் பண்டங்களை சேகரித்த மாட்டு வண்டிகள் புத்தூரிலிருந்து ஏ9 பிரதான வீதி வழியாக பரந்தன் வந்தடைந்து, அங்கிருந்து பரந்தன் - முல்லைத்தீவு வீதி ஊடாக புளியம்பொக்கனை கோவிலைச் சென்றடைந்துள்ளன. இன்று (21) இரவு ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வு சிற்பாக இடம்பெறவுள்ளது.
21 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
3 hours ago