2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பொதுச்சந்தை கடைகளுக்கானஅனுமதி, கிடைத்ததும் வழங்கப்படும்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மார்ச் 06 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையின்  கீழ் உள்ள மல்லாவிப் பொதுச்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளை வர்த்தகர்களுக்கு வழங்குவதில் பிரதேச சபை தொடர்ந்து இழுத்தடித்து வருவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லாவிப் பொதுச்சந்தையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவீன கடைத்தொகுதியொன்று அமைக்கப்பட்டு இதுவரை வர்த்தகர்களுக்கு வழங்கப்படாது, மூடிய நிலையில் காணப்படுகின்றது. இதனைத் தமக்கு வழங்குமாறு வர்த்தகர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை நிர்வாக வர்த்தகர்கள் இணைந்து பல கலந்துரையாடல்கள் மேற்கொண்ட போதும், இதுவரை குறித்த கடைத்தொகுதிகள் வழங்கப்படவில்லை.

குறித்த கடைத்தொகுதிகளை வழங்குமாறு கடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

எனினும், குறித்த கடைகளை வழங்குவது தொடர்பில் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் வழங்கப்படும் என பிரதேச சபைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X