2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு’

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

முல்லைத்தீபு - வேணாவில் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், நேற்று (02) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சியின் தலைவர் க.இன்பராஸா, செயலாளர் நா.அன்புராஜ் அன்டனி ஆகியோர் கூட்டாக இதனை அறிவித்துள்ளனர்.

இங்கு கருத்துரைத்த கட்சியின் தலைவர் க.இன்பராஜா, கடந்த பிரதேச சபைத் தேர்தலில், திருகோணமலையில், மூன்று ஆசனங்களை தாங்கள் பெற்றதாகவும் தங்களது கன்னி முயற்சிக்கு, மக்கள் அங்கிகாரம் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் தனித்துவமாக நின்று போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்த அவர், எனவே, புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புகள் அனைவரும் சிந்தித்து, தமது கட்சிக்கு உதவிக்கரம் நீட்டவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இதையடுத்து கருத்துரைத்த கட்சியின் செயலாளர் நா.அன்புராஜ் அன்டனி, போராளிகளுக்கு அரசாங்கங்கம் சார்பில் வழங்கப்படுகின்ற உதவித்திட்டங்கள் கிடைப்பது மிகக் குறைவெனத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில், முன்னால் போராளிகளை நாடாளுமன்றம் அனுப்புவீர்களாக இருந்தால், மக்களிடம் இருக்கும் சுமைகளில் அரைவாசி சுமையை முதல் கட்டமாக அகற்ற முடியுமெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .