Niroshini / 2021 மே 27 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
பொலிஸாரின் உதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கான உரங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட கமநல சேவை நிலையங்கள் மேற்கொண்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பத்து கமநல சேவை நிலையங்களிலும் சிறுபோகத்துபக்குத் தேவையான உரங்கள் பயணக் கட்டுப்பாடு காரணமாக விநியோகிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
இந்நிலையில், கமநல சேவை நிலையங்களில் இருந்து உரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முல்லைத்தீவு விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து, கொழும்பில் இருந்து கமநல சேவை நிலையங்கள ஊடாக விவசாயிகளுக்கான உரங்களை உடனடியாக விநியோகிக்குமாறு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, பொலிஸாரின் உதவியுடன் உரங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட கமநல சேவை நிலையங்கள் மேற்கொண்டுள்ளன.
இதற்கமைய, கிராமங்களில் இருந்து உழவு இயந்திரங்களை வரவழைத்து, உரங்களை கிராமங்களுக்கு கொண்டு சென்று விநியோகிப்பது என்று, மாவட்ட கமநல சேவை நிலையங்களுக்கு முடிவெடுத்துள்ளது.
அத்துடன், உரங்களைக் கொண்டு செல்வதில் தாக்கம் செலுத்தும் பயணக் கட்டுப்பாடு தொடர்பாக பொலிஸாரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்தென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் உர விநியோகம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் வினவியபோது, உரங்களை உடனடியாக விவசாயிகளுக்கு விநியோகிக்குமாறு, கமநல சேவை நிலையங்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
9 hours ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago
14 Nov 2025