Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி – கோணாவில் பகுதியில், இன்றைய தினம் (07), அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, பற்றைக்காட்டுக்குள் இருந்து 61 கோடா போத்தல், கசிப்பு உற்பத்தி பொருள்கள், கொள்கலன் உள்ளிட்ட பல பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஊற்றுபுலம் பகுதியில், 7 கசிப்பு போத்தல்கள், கசிப்பு உற்பத்தி பொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்டப் பொலிஸ் நிலைய மது ஒழிப்புக் குற்றப் பிரிவின் அதிகாரி சதுரங்க, கிளிநொச்சி - கோணாவில் கிராம மக்கள், ஏனைய கிராமங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.
இவர்களைப் போன்று, ஏனைய கிராம மக்களும் இணைந்துச் செயற்பட்டால், கிளிநொச்சி மாவட்டத்தில், சட்டவிரோதச் செயற்பாடுகளை முற்றாக நிறுத்த முடியுமென்றும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago